SuperTopAds

அணு ஆயுதப் பாதுகாப்பை பிரிட்டனும் பிரான்சும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - புதின் கோரிக்கை!

ஆசிரியர் - Editor IV
அணு ஆயுதப் பாதுகாப்பை பிரிட்டனும் பிரான்சும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - புதின் கோரிக்கை!

உக்ரைனுடனான சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான தனது அணு ஆயுதப் பாதுகாப்பை பிரிட்டனும் பிரான்சும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என புதின் கோரிக்கை விடுத்துள்ளர்.

உக்ரைனுடனான அமைதி ஒப்பந்தத்திற்கான மாஸ்கோவின் நிபந்தனைகளின் பட்டியலில், தனது ஐரோப்பிய நட்பு நாடுகளைப் பாதுகாக்க பிரிட்டன் தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவு. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாஸ்கோவிற்கும் கீவிற்கும் இடையில் அமைதியைக் கொண்டுவருவதில் பிரான்சும் பிரிட்டனும் ஆர்வமாக இருந்தால், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாக்க தங்கள் அணு ஆயுதத் தடுப்பு சக்தியைப் பயன்படுத்துவதை அவர்கள் நிறுத்த வேண்டும் என்று புதின் கூறினார்.

இந்த முன்மொழிவுகளின் கீழ், நேட்டோ தனது படைகளை 1997-ஆம் ஆண்டு எல்லைகளுக்குத் திரும்பப் பெற வேண்டும் என்றும், உக்ரைன் நேட்டோவில் சேருவதைத் தடுக்க வேண்டும் என்றும் புதின் கோருகிறார்.

மேலும், நேட்டோ கூட்டணியிலிருந்து பின்லாந்தை வெளியேற்ற வேண்டும் என்றும், உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் ரஷ்யா கோருகிறது.

இதற்கிடையில், ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீர்மானிக்க ரஷ்யாவிற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் இந்த முன்மொழிவை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார்.

Radio