SuperTopAds

ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் பங்களாதேஷின் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி!

ஆசிரியர் - Editor IV
ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் பங்களாதேஷின் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி!

ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் பங்களாதேஷின் ஆடை ஏற்றுமதி 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

Eurostat தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், பங்களாதேஷின் ஆடை ஏற்றுமதி வருமானம் 11.91 சதவீதத்தால் குறைந்து 13.48 பில்லியன் யூரோக்களாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஏற்றுமதி அளவு 5.74 சதவீதத்தாலும், ஒரு கிலோகிராம் ஆடைக்கான சராசரி விலை 6.54 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளன.

இதற்கு மாறாக, சீனாவின் ஆடை ஏற்றுமதி வருமானம் 4.46 சதவீதத்தாலும், வியட்நாமின் ஏற்றுமதி வருமானம் 4.33 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.

மத்திய கிழக்கு நெருக்கடியால் ஐரோப்பிய சந்தையில் கேள்வி குறைந்துள்ளதுடன், நுகர்வோர் செலவுகளைக் குறைத்து வருவதாக பங்களாதேஷ் ஆடைத் தொழில்துறை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், எரிவாயு மற்றும் எரிசக்தித் தட்டுப்பாடு, அதிகரித்த உற்பத்திச் செலவுகள், தொழிலாளர் அமைதியின்மை மற்றும் கொள்வனவு உத்தரவுகள் குறைந்துள்ளமை ஆகியவை பங்களாதேஷின் ஆடைத் தொழில்துறையைப் பாதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த ஆடை இறக்குமதி வருமானமும் 2.46 சதவீதத்தால் குறைந்து 70.72 பில்லியன் யூரோக்களாகப் பதிவாகியுள்ளது.

Radio