SuperTopAds

காஸாவுக்கான உதவிகளைத் தடையின்றி அனுமதிக்க வேண்டும் - இஸ்ரேலை வற்புறுத்தும் அவுஸ்திரேலியா!

ஆசிரியர் - Editor IV
காஸாவுக்கான உதவிகளைத் தடையின்றி அனுமதிக்க வேண்டும் - இஸ்ரேலை வற்புறுத்தும் அவுஸ்திரேலியா!

காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகளைத் தடையின்றி அனுமதிக்குமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

காஸாவின் தற்போதைய நிலைமையை "முழுமையாக மாற்றியமைக்கக்கூடியது" எனக் குறிப்பிட்டு கனடா, இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து அவுஸ்திரேலியா கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் பென்னி வோங், "குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், கடுமையான வானிலை மற்றும் பலத்த மழை என்பன காஸாவில் ஏற்கனவே நிலவும் மோசமான மனிதாபிமான நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Radio