SuperTopAds

பசுபிக் பெருங்கடலில் 100 நாள்கள் தத்தளித்த ஐந்து பேர் உயிருடன் மீட்பு!

ஆசிரியர் - Editor IV
பசுபிக் பெருங்கடலில் 100 நாள்கள் தத்தளித்த ஐந்து பேர் உயிருடன் மீட்பு!

மைக்ரோனேசியாவின் இரு தீவுகளுக்கு இடையே சுமார் ஒரு மணி நேரப் பயணத்தின்போது காணாமல்போய், பசுபிக் பெருங்கடலில் சுமார் 100 நாட்கள் தத்தளித்த ஐந்து பேர் அதிசயமாக உயிர்தப்பியுள்ளனர்.

சிறிய படகு ஒன்றில் பயணித்தபோதே இவர்கள் இவ்வாறு கடலில் பாதையை இழந்து தத்தளித்துள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடலில் சிக்கியிருந்த கடுமையான காலத்தில் தங்களின் உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, இவர்கள் கடலாமைகள் மற்றும் பறவைகளை உணவாக உட்கொண்டதுடன், மழைநீரைக் குடித்து தாகத்தைத் தணித்துக்கொண்டுள்ளனர்.

எனினும், இந்தத் துயரமான காலப்பகுதியில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன .

Radio