ஈரானுடனான போரை முடிவுறுத்த சீனாவிடம் உதவி கோரிய அமெரிக்கா!

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா தற்போது சீனாவிடம் உதவி கோரியுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன், அமெரிக்க பொக்கிஷச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் டெஹ்ரான் மீது சீனா தனது இராஜதந்திர செல்வாக்கைப் பயன்படுத்தி மோதலை முடிக்க உதவுமாறு பெய்ஜிங்கிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கடந்த இரண்டு வாரங்களாகப் பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் தலைவர்களுடன் தினசரி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன், புதிய போர்நிறுத்தம் மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க வாஷிங்டன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.




