ஈரான் மக்களின் மன உறுதி வலிமையானது - பாராட்டும் ரஷ்ய அதிபர் புதின்!

ஈரான் மக்கள் வெளிப்படுத்தி வரும் துணிச்சல், வீர உணர்வு மற்றும் மன உறுதி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் நடைபெற்ற 23ஆவது வால்டாய் சர்வதேச கலந்துரையாடல் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈரானைச் சுற்றி இடம்பெற்று வரும் சம்பவங்களை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது
மேலும், ஈரானின் அரச நிர்வாகம், ஆயுதப் படைகள் மற்றும் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் நாட்டுக்காகத் தியாகம் செய்யத் தயாராக உள்ளார்கள் .
ஈரானிய மக்களின் மன உறுதியைப் பாராட்டி புடின் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளது.




