SuperTopAds

ஒலியின் வேகத்தைப் போன்று ஏழு மடங்கு வேகத்தி எவுகணைகள் பாயும் - ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஆசிரியர் - Editor IV
ஒலியின் வேகத்தைப் போன்று ஏழு மடங்கு வேகத்தி எவுகணைகள் பாயும் - ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) விண்வெளி ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் பலாலி, ஈரானிய ஏவுகணைகளின் வேகம் குறித்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தங்களது ஏவுகணைகள் ஒலியின் வேகத்தைப் போல ஏழு மடங்கு வேகமான 'மாக் 7' (Mach 7) வேகத்தில் அதாவது விநாடிக்கு 2.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் திறன் கொண்டவை என்றும், இவற்றை இடைமறிக்க எதிரிகளுக்கு அதைவிட அதிவேக அமைப்புகள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிவேக ஏவுகணைகள் மேற்கு ஈரானிலிருந்து டெல் அவிப் நகரை வெறும் ஏழு நிமிடங்களிலும், வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்களை 90 விநாடிகளுக்குள்ளும் சென்றடையக் கூடும் என்பதால், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இது ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.

Radio