சிரியா அதிரடி - மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய முடிவு!

சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இணைந்துள்ள மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சிரியாவும் இணையத் தயாராகி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தில் இணைய டமாஸ்கஸ் ஏற்கெனவே முடிவு செய்துள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதாக பிராந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.




