ஹோமுஸ் நீரிணை வழியே பாதுகாப்பாகப் பயணிக்க இலங்க்கைக் கப்பலுக்கு அனுமதி கொடுத்த ஈரான்!

இலங்கைக்கு இரசாயன உரங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்றுக்கு ஈரானிய கடற்படையின் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டு, ஹோமுஸ் நீரிணை வழியே பாதுகாப்பாகப் பயணிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இக் கப்பல் தற்போது இலங்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாக 'தி ஐலேண்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஹோமுஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உத்தியோகபூர்வ அனுமதியின்றி அப்பாதை வழியாகப் பயணிக்க முயலும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




