பரந்தன் வீதியில் விபத்து -

கிளிநொச்சி, பரந்தன் வீதியில் நல்லூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரியில் இருந்து பூநகரியின் ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன் பகுதியில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்