SuperTopAds

சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

ஆசிரியர் - Editor IV
சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைந்துள்ள சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான பலமாடி கட்டிடம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரியாத் நகரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என சவுதி சிவில் பாதுகாப்புத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கிங் அப்துல்லா நிதியியல் மாவட்டத்தில் (King Abdullah Financial District) அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ சவுதி செய்தி முகவரகம் அறிக்கையில், நாட்டின் எரிசக்தி அமைச்சகத்தின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, அராம்கோ நிறுவனத்தின் நிர்வாகக் கட்டிடத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ஏவுகணை வான்வெளியிலேயே அழிக்கப்பட்டபோது, அதன் இடிபாடுகள் வீழ்ந்ததன் காரணமாகவே கட்டிடத்திற்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்றும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Radio