2,000 கி.மீ.க்கு அப்பால் ஈரானின் ஏவுகணை வீச்சு - ஐரோப்பியாவுக்கும் ஆபத்து!

ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வீச்சு வரம்பை 2,000 கிலோமீற்றருக்கு அப்பால் விரிவுபடுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘சல்மான்’ உள்ளிட்ட உள்நாட்டு ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் மூலம் நீண்டதூர ஏவுகணைகளை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 6,000–7,000 கி.மீ. வீச்சுத் திறன் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தமது தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தால், அவையும் பதில் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கு மோதலில் நேரடியாக ஈடுபடுவதைத் தடுக்கும் மூலோபாய எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.




