SuperTopAds

இஸ்ரேலுடனான தொழில்நுட்ப ஒப்பந்தத்தை இரத்து செய்த நியூயார்க் நகர பொலிஸ் !

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேலுடனான தொழில்நுட்ப ஒப்பந்தத்தை இரத்து செய்த நியூயார்க் நகர பொலிஸ் !

இஸ்ரேலைச் சேர்ந்த ‘கோக்னைட்’  என்ற உளவுத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் திட்டமிடப்பட்டிருந்த 750,500 அமெரிக்க டாலர் மதிப்பிலான ‘FalcoNet’ கைப்பேசி கண்காணிப்பு ஒப்பந்தத்தை நியூயார்க் நகர பொலிஸ் திணைக்களம் (NYPD) இடைநிறுத்தியுள்ளது. போலி மொபைல் கோபுரங்கள் போலச் செயல்பட்டுப் பொதுமக்களின் தொலைபேசி இருப்பிடங்கள் மற்றும் தரவுகளைக் கண்காணிக்கும் இந்தத் தொழில்நுட்பத்திற்கு மனித உரிமை அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், எந்தவிதப் போட்டி ஏலமும் இன்றி நேரடி ஒப்பந்தமாக (Sole-source contract) வழங்கப்பட்ட இந்தத் திட்டம், தேவையான தகுதிகளைப் பெறவில்லை எனக் கூறி NYPD தற்போது இதனைத் திரும்பப் பெற்றுள்ளதுடன், பகிரங்க போட்டி ஏல நடைமுறைக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது.

Radio