பராகுவே ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க அந்த நாட்டு செனட் சபை தீர்மானம்!

முன்னணி வங்கி ஒன்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து, பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யாவை பதவியிலிருந்து நீக்குவதற்கு அந்த நாட்டு மேலவை (செனட் சபை) தீர்மானித்துள்ளது.
இதன்படி, மேலவையின் 45 உறுப்பினர்களில் 44 பேரின் ஆதரவுடன் நேற்று (06) அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு வாக்களிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாண்டியாகோ பென்யாவுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் யுஎனோ (Ueno) வங்கி, நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான நெருக்கடி காரணமாக ஒரே இரவில் மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நெருக்கடி உருவானது.
இதனால் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வங்கி நெருக்கடி தொடர்பாக பராகுவே சட்ட மாஅதிபர், பென்யா மற்றும் பல முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக மூன்று குற்றவியல் வழக்குகளைப் பதிவுசெய்துள்ளார்.
இந்த விசாரணைகளை எதிர்கொண்டுள்ள பென்யா, பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலைகளில், அவர் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலவையின் நம்பிக்கை இல்லாத் தீர்மான வாக்களிப்பைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி பெட்ரோ அலியானா புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.




