SuperTopAds

தோல்வியின் வலி - வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியை பதவியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ள ட்ரம்ப் !

ஆசிரியர் - Editor IV
தோல்வியின் வலி - வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியை பதவியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ள ட்ரம்ப் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த சுசீ வைல்ஸை அந்தப் பதவியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளதுடன், அவருக்குப் பதிலாக ஸ்டீபன் மில்லரை நியமிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி சந்தித்த பலத்த பின்னடைவைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்படும் மிக முக்கிய உயர் மட்டப் பதவி மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் குடியரசுக் கட்சி தனது பெரும்பான்மையை இழந்தமை குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளதுடன், தேர்தல் வியூகங்கள் தொடர்பாக கோபத்தில் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஸ்டீபன் மில்லர், அவரது இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்காற்றிய ஒருவராகக் கருதப்படுகிறார்.

எனினும், இந்த உயர்பதவிக்கு மில்லரை நியமிப்பதன் மூலம், ட்ரம்ப் தனது ஆட்சி நிர்வாக அணுகுமுறையில் எந்த வித அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்பதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, சுசீ வைல்ஸ் இனி தனது அரசியல் செயல்பாட்டுப் பணிகளுக்குத் திருப்பப்படுவார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வைல்ஸ் தனது கடமைகளை மிகச்சிறப்பாகச் செய்தார் என்று பாராட்டியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், புளோரிடாவில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டபோது ஸ்டீபன் மில்லரையும் வெகுவாகப் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.

Radio