தோல்விக்கு ஈரானுடன் நடத்தப்பட்ட போர்தான் நேரடிக் காரணம் - அமெரிக்க துணைத் தலைவர்!

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி அடைந்த பெருதோல்விக்கு ஈரானுடன் நடத்தப்பட்ட போர்தான் நேரடியான காரணம் என அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் இரு சபைகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், “நாங்கள் தோற்பதற்குக் காரணம் இந்தப் போர்தான்” என வான்ஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலுடன் இணைந்து பிப்ரவரியில் ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தப் போர் அரசியல் ரீதியாக பெரும் விலையைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த 6 ஆண்டுகளுக்கு செனட் சபையை இழக்க இதுவே வழிவகுத்ததாகச் சாடியுள்ளார்.
இதற்கிடையில், நீண்டகாலமாக ஈரான் எதிர்ப்பாளராக அறியப்பட்ட செனட்டர் டெட் குரூஸும், இந்தப் போர் மிக நீண்ட காலம் நீடித்துவிட்டதாக விமர்சித்துள்ளமை ட்ரம்பின் ஆதரவு வட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




