SuperTopAds

காடி ஐசன்கோட்டிற்கு ஆதரவு - அரபு தலைமையான கூட்டுப் பட்டியல் கூட்டணி அறிவிப்பு!

ஆசிரியர் - Editor IV
காடி ஐசன்கோட்டிற்கு ஆதரவு - அரபு தலைமையான கூட்டுப் பட்டியல் கூட்டணி அறிவிப்பு!

இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டிற்கு  ஆதரவு அளிக்கப்போவதாக அரபு தலைமையான 'கூட்டுப் பட்டியல்' கூட்டணி அறிவித்துள்ளது.

அதிபர் ஐசக் ஹெர்ஸாக்கைச்  சந்தித்து, ஆட்சி அமைக்கும் பொறுப்பை ஐசன்கோட்டிடம் வழங்குமாறு பரிந்துரைக்கவுள்ளதாகக் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தேர்தலில் அரபு கட்சிகள் 19 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், நெதன்யாகுவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதையும் அவர் மீண்டு வருவதைத் தடுப்பதையும் முதன்மை இலக்காகக் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கூட்டணி தெரிவித்துள்ளது.

Radio