இல்லாத அணு ஆயுதத்தை எடுக்க போர் - ஆனால் அந்தப் பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை – பராக் ஒபாமா!

அணு ஆயுத அச்சுறுத்தலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட போர், இதுவரை அந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை வழங்கவில்லை என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத அச்சுறுத்தலை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், போர் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் அதன் இறுதி விளைவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒபாமாவின் இந்தக் கருத்து, அணு ஆயுத விவகாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் தொடர்பான சர்வதேச விவாதங்களுக்கு மேலும் முக்கியத்துவம் அளித்துள்ளது.




