அடுத்த வாரம் வாக்கெடுப்பு - பதவி நீக்கப்படும் ட்ரம்பின் பாதுகாப்புச் செயலாளர்!

அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் அண்மைய தேர்தல் தோல்விக்குப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் பொறுப்பேற்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு கட்சிகளையும் சேர்ந்த சட்டமியற்றுபவர்களை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அடுத்த வாரம் பிரதிநிதிகள் சபை மீண்டும் கூடும்போது இந்த தீர்மானம் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஈரானுடனான மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்புக் கொள்கைகளுமே குடியரசுக் கட்சியின் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்ததாகக் கட்சியின் சில உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும் தேர்தல் தோல்விக்கு ஈரானுடனான போர் முக்கிய காரணமாக அமைந்ததாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும், பீட் ஹெக்ஸெத் தானாக முன்வந்து பதவி விலகாவிட்டால் மட்டுமே, அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.




