SuperTopAds

களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் பழுகாமத்தில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு: பெண் கைது

ஆசிரியர் - Editor III
களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் பழுகாமத்தில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு: பெண் கைது

களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் பழுகாமத்தில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு: பெண்   கைது 

 

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாகப் பொதிசெய்து வைக்கப்பட்டிருந்த 20,000 மில்லி லீற்றர் (20 லீற்றர்) கசிப்பு மீட்கப்பட்டதுடன், இது தொடர்பில் பெண் வியாழக்கிழமை(5)   கைது செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பிரதம இன்ஸ்பெக்டரும் பதில் பொறுப்பதிகாரியுமான ஜெயசீலன் மற்றும் பிரதம இன்ஸ்பெக்டர் பெரேரா ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இக் விசேட சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

பழுகாமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச் சோதனையின்போது, 20 லீற்றர் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட 20 லீற்றர் கசிப்பு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio