SuperTopAds

வடகொரியா ஏவுகணை போன்றதொரு கணையத்தை ஏவிச் சோதனை - தென்கொரியா குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Editor IV
வடகொரியா ஏவுகணை போன்றதொரு கணையத்தை ஏவிச் சோதனை - தென்கொரியா குற்றச்சாட்டு!

வடகொரியா தனது கிழக்குக் கடலோரப் பகுதியை நோக்கி ஏவுகணை போன்றதொரு கணையத்தை ஏவிச் சோதனை நடத்தியுள்ளதாகத் தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தச் சோதனையில் பயன்படுத்தப்பட்ட கணையத்தின் வகை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், கடந்த ஒரு மாத காலத்தில் வடகொரியா நடத்திய நான்காவது ஏவுகணைச் சோதனையாக இது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வடகொரியா நடப்பு ஆண்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இதில் 900 கிலோமீற்றர் தூரம் வரை பாயக்கூடிய ஏவுகணைகளும், அதிவேக (hypersonic) ஏவுகணைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Radio