SuperTopAds

வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின்  ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், தான் எதிர்க்கும் சட்டங்களை முடக்குவதற்கு ஜனாபதியின் 'வீட்டோ' (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

'VETO' என்று எழுதப்பட்ட சிவப்பு நிற தொப்பியைக் காண்பித்து, ஜனாதிபதி ட்ரம்ப் இந்தச் செய்தியை வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், ஜனநாயகக் கட்சியினர் தான் உடன்படாத மசோதாக்களைக் கொண்டுவந்தால், அவற்றை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டால், இறுதியில் ஜனநாயகக் கட்சியினர் தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சிலர் ஏற்கனவே தன்னைத் தொடர்புகொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, இரு தரப்பிற்கும் இடையே எதிர்கால அரசியல் உடன்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிபரின் கருத்து உணர்த்துகிறது.

Radio