மிகப்பெரும் அழிவை தரும் கொத்துக் குண்டை சோதித்தது வடகொரியா!

போர் தயார்நிலை மற்றும் கொத்துக் குண்டு திறனை மதிப்பிடும் நோக்கில் கடந்த சனிக்கிழமை வடகொரியா இராணுவம் சோதனை நடத்தியது.
இதில் ஒரு ஸ்டாண்டர்ட் டைப்-2 கொத்துப் போர்க்குண்டானது, அதன் அதிகபட்ச அடர்த்தியில், 12 முதல் 13 ஹெக்டேர், அதாவது சுமார் 30 முதல் 32 ஏக்கர் பரப்பளவை அழிக்க முடியும் என்று வட கொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன.




