SuperTopAds

புடின் மிகவும் புத்திசாலி - என்றாலும், அவர் ஒரு தீவிரமான சூழ்ச்சிக்காரர் - கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்!

ஆசிரியர் - Editor IV
புடின் மிகவும் புத்திசாலி - என்றாலும், அவர் ஒரு தீவிரமான சூழ்ச்சிக்காரர் - கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிகவும் புத்திசாலி மற்றும் கடின உழைப்பாளி என்றாலும், அவர் ஒரு தீவிரமான சூழ்ச்சிக்காரர் என்றும், "உண்மையிலேயே தீயவர்" (Truly Evil) என்றும் கனடா நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் விமர்சித்துள்ளார்.

புடினை ஒரு நிஜ வாழ்க்கை 'பாண்ட் வில்லன்' (Bond Villain) என வர்ணித்துள்ள அவர், மற்றவர்களின் பலவீனங்களை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் வித்தையை அவர் நன்கு அறிந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரசியலில் புடினின் செயல்பாடுகள் குறித்து அவர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள் தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Radio