எல்லைதண்டும் பயங்கரவாதம் - தாலிபான் அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் கடுமையான எச்சரிக்கை!

எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் தரப்பு, பயங்கரவாதத்தை எந்தக் காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.




