SuperTopAds

ரஷ்யாவின் அதிநவீன Su-35 போர் விமானங்களைக் கொள்வனவு செய்தது ஈரான்!

ஆசிரியர் - Editor IV
ரஷ்யாவின் அதிநவீன Su-35 போர் விமானங்களைக் கொள்வனவு செய்தது ஈரான்!


ரஷ்யாவின் அதிநவீன

 Su-35 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுடனான தற்போதைய போர்ச் சூழல் மற்றும் மோதல்கள் முற்றாக முடிவுக்கு வந்த பின்னரே அந்த விமானங்கள் நாட்டுக்கு வந்து சேரும் என்றும் ஈரானிய இராணுவத்தின் பேச்சாளர் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த போர் விமானங்கள் மோதல்கள் தொடங்குவதற்கு முன்பே வந்துசேரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இதற்கான ஆரம்பகட்டப் பயிற்சிகள் மற்றும் ஏற்பாடுகள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio