ஐரோப்பாவை உலுக்கும் இளைஞர் போராட்டம் - சூரிச்சில் வெடித்தது வன்முறை மோதல்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள லாங்ஸ்ட்ராஸ் பகுதியில், அக்டோபர் 31 இரவு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற அனுமதியற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
போர், இராணுவ மறுஆயுதமயமாக்கல், காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கார்கள், குப்பைக் கொள்கலன்கள், மின்சார மிதிவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகளின் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டன.
போராட்டக்காரர்கள் பட்டாசுகள், கற்கள் மற்றும் பாட்டில்களால் காவல்துறையினரைத் தாக்கியதைத் தொடர்ந்து, காவல்துறை தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள், கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியது. அதிகாலை 1.30 மணியளவில் நிலைமை கட்டுக்குள் வந்தது.
பிரான்ஸில் தொடங்கிய போராட்டங்களின் தாக்கம் ஜெர்மனி, அல்பேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பேசப்பட்டுவரும் நிலையில், சுவிட்சர்லாந்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.




