SuperTopAds

AI கண்ணாடி - பரீட்சையில் மோசடி செய்த மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்க நடவடிக்கை!

ஆசிரியர் - Editor IV
AI கண்ணாடி - பரீட்சையில் மோசடி செய்த மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்க நடவடிக்கை!

தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவுத் திறன்கொண்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தி பரீட்சையில் மோசடி செய்யும் மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கத் திட்டமிடப்படுகிறது.

அத்தகைய மாணவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கல்வி அமைச்சு முடிவுசெய்துள்ளது.

அவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான தடையை ஓராண்டிலிருந்து மூவாண்டாக நீட்டிக்கவும் திட்டமிடப்படுகிறது.

சோலில் (Seoul) உள்ள பல்கலைக்கழகங்களில் நடந்த கட்டுரைத் தேர்வுகளின்போது மூன்று மாணவர்கள் AI கண்ணாடிகளை அணிந்திருந்தது அல்லது வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்ணாடிகளால் படங்களையும் வீடியோக்களையும் எடுக்கமுடியும். மேலும், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கேள்விகளுக்குப் பதில்களையும் பெறமுடியும்.

இதனால் பரீட்சை நிலையங்களில் சந்தேகத்துக்குரிய கண்ணாடிகளைக் கண்டறியச் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

தென்கொரியாவின் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை, இம்மாதம் நடைபெறுவுள்ளது. அந்தப் பரீட்சை மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Radio