எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் புவியியல் எல்லைகளின்றி உடனடிப் பதிலடி - ஈரான் உச்சத்தலைவர் உத்தரவு!

எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் புவியியல் எல்லைகளின்றி உடனடியாகப் பதிலடி கொடுக்க ஈரான் உச்சத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அனைத்துச் சொத்துக்களையும் ஈரான் தாக்குதல் வரம்பிற்குள் கொண்டுவரவும், புதிய தாக்குதல்கள் தொடங்கப்பட்டால் அதன் முடிவை ஈரானியப் படைகளே தீர்மானிக்கும் என்றும் மூத்த ராணுவ தளபதிகளுடனான சந்திப்பில் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.




