ஐக்கிய அரபு இராச்சியத்தில் எரிபொருள் விலை குறைப்பு!

ஐக்கிய அரபு இராச்சியம், 2026 நவம்பர் மாதத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த விலைக் குறைப்பு வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் 4.40 திராக இருந்த ஒரு லீற்றர் Super 98 பெற்றோலின் விலை, நவம்பர் மாதத்தில் 4.16 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இலங்கைப் பெறுமதியில் சுமார் 376 ரூபாயாகும்.
Special 95 பெற்றோலின் விலை 4.28 திராமிலிந்து 4.04 திராமாகவும், E-Plus 91 பெற்றோலின் விலை 4.21 திராமிலிந்து 3.97 திராமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒரு லீற்றர் டீசலின் விலை 4.80 திராமிலிந்து 4.75 திராமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது இலங்கைப் பெறுமதியில் சுமார் 430 ரூபாயாகும்.
இந்தப் புதிய விலைகள் நவம்பர் முதலாம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் நடைமுறைக்கு வருகின்றன.
பெற்றோல் விலைகள் சுமார் 5.5 முதல் 5.7 சதவீதம் வரையிலும், டீசல் விலை சுமார் ஒரு சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு மோதலுடன் தொடர்புடைய சர்வதேச எரிசக்திச் சந்தையின் விலை மாற்றங்களுக்கு மத்தியில், மாதாந்தம் சர்வதேச சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அரபு இராச்சியம் எரிபொருள் விலைகளைத் திருத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




