ஓமான் கடற்பரப்பில் தாக்கப்பட்ட கப்பலில் இருந்து 25 ஊழியர்கள் மீட்பு!

ஓமானின் முசந்தம் கடற்பரப்பில் வைத்து பனாமா கொடி தாங்கிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த 25 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஓமான் கடற்படையும் அந்த நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையமும் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கையின் மூலம் அனைவரும் காப்பாற்றப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன.




