SuperTopAds

ஒட்சிசன் கொள்கலன் வெடித்து 10 பேர் உயிரிழப்பு - பாகிஸ்தானில் சோகம்!

ஆசிரியர் - Editor IV
ஒட்சிசன் கொள்கலன் வெடித்து 10 பேர் உயிரிழப்பு - பாகிஸ்தானில் சோகம்!

பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள சிந்து மாகாணத்தில், அரச மருத்துவமனை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நோயாளர் காவு வண்டியில் ஒட்சிசன் கொள்கலன் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாகர்பார்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள குறித்த மருத்துவ நிலையத்தில் நேற்று இரவு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் மருத்துவ நிலையத்தின் ஊழியர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களும் அடங்குவதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் அரிப் அசீஸ் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றிக்கொண்டிருந்தபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை அதிகாரி கலீல் அப்ரோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விரைவானதும் வெளிப்படையானதுமான விசாரணையை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Radio