SuperTopAds

இஸ்ரேலின் தேர்தலில் தலையீடா - முற்றாக மறுக்கும் கத்தார்!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேலின் தேர்தலில் தலையீடா - முற்றாக மறுக்கும் கத்தார்!

இஸ்ரேலின் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் கத்தார் தலையிட்டதாகவும், அங்குள்ள அரசியல் பிரிவுகளுக்கு நிதியுதவி அளித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை கத்தார் அரசு முற்றிலும் மறுத்துள்ளது.

இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டொக்டர் மாஜித் அல்-அன்சாரி கூறுகையில், "தோஹா எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நிதியளிக்கவில்லை, தேர்தல் வாக்கெடுப்பிலும் முறைகேடு செய்யவில்லை" எனத் தெளிவுபடுத்தினார்.

வலதுசாரி இஸ்ரேலிய அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் இக்குற்றச்சாட்டுகள் அளப்பரிய நகைச்சுவையானவை மற்றும் ஆபத்தானவை என்று சாடிய அவர், இஸ்ரேல் தனது சொந்த உள்நாட்டு அரசியல் சவால்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே கத்தார் மீது வழக்கமான பழிசுமத்தும் தந்திரத்தைக் கையாள்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

Radio