வெளியானது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் அறிக்கை!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் ஐந்தாவது முழுமையான அமர்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த அமர்வு ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கியதுடன், கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் முக்கிய உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.
இதன்போது, ஷி ஜின்பிங் சமர்ப்பித்த பணியறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு, கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கட்சியின் நிர்வாகத்தைத் தொடர்ச்சியாகவும் கடுமையான ஒழுக்கத்துடனும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பான முக்கிய விடயங்கள் அடங்கிய மத்திய குழுவின் தீர்மானமும் இதன்போது பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மட்டங்களிலும் கடுமையான ஒழுக்கத்துடன் ஆளும் கட்சியை நிர்வகிக்கும் முயற்சியின் ஊடாக, புதிய யுகத்தில் அடைந்துள்ள முக்கிய வெற்றிகளுக்கும் இந்த அமர்வில் உயர்ந்த மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது தேசிய மாநாட்டை 2027ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் பெய்ஜிங்கில் நடத்துவதற்கும் இந்த அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




