நெதன்யாகுவுக்கு கொடூரமான தோல்வி - தேர்தல் முடிவுகளைச் சீர்குலைக்க முயற்சி - கடுமையாகச் சாடும் யாயிர் கோலன்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொடூரமான தோல்வியைச் சந்தித்துள்ளதாகவும், அதனை சகித்துக்கொள்ள முடியாமல் தேர்தல் முடிவுகளைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் இஸ்ரேலின் ஜனநாயகக் கட்சியின் தலைவர் யாயிர் கோலன் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஒட்டுமொத்த பொதுமக்களின், குறிப்பாக அரபு சமூகத்தின் தேர்தல் பங்களிப்புக்கான அங்கீகாரத்தைப் பறிக்கும் வகையில் நெதன்யாகு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட கோலன், "நெதன்யாகு தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருக்கட்டும், நாங்கள் அவரைப் பதவியிலிருந்து அகற்றி புதிய ஆட்சியை அமைக்கும் பணியைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.




