நெதன்யாகுவின் அரசாங்கத்தைப் அகற்றுவதற்கு தயார் - கூட்டு அரபு கட்சிகளின் தலைவர்!

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு வழிவகுக்க தமது கூட்டணி தயாராக இருப்பதாக கூட்டு அரபு கட்சிகளின் தலைவர் யூசுப் ஜபாரின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுமார் 70% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சி 54 இடங்களையும், காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சியான "மாற்றம்" கூட்டணி 47 இடங்களையும், அரபுக் கட்சிகள் 19 இடங்களையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், தனியாக ஆட்சி அமைக்க தேவையான இடங்களை எந்த கூட்டணியும் இன்னும் பெறவில்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.




