SuperTopAds

கல்முனையில் 205வது வருடாந்த கொடியேற்றப் பெருவிழா ஏற்பாடுகள்: பிரதேச செயலாளர் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம்

ஆசிரியர் - Editor III
கல்முனையில் 205வது வருடாந்த கொடியேற்றப் பெருவிழா ஏற்பாடுகள்: பிரதேச செயலாளர் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம்
கல்முனையில் 205வது வருடாந்த கொடியேற்றப் பெருவிழா ஏற்பாடுகள்: பிரதேச செயலாளர் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் 
எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 205வது வருடாந்த கொடியேற்றப் பெருவிழாவை மிகவும் சிறப்பாகவும் ஒழுங்குமுறையுடனும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம், கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்ஸார் அவர்களின் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும் அடிப்படை வசதிகளையும் முழுமையாக உறுதிப்படுத்தும் நோக்கில் இக்கூட்டம் கூட்டப்பட்டது.
கொடியேற்றுப் பெருவிழா காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தத் தேவையான விசேட போக்குவரத்து ஒழுங்குங்குகள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்,பெருவிழா நடைபெறும் பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் தடையற்ற குடிநீர் விநியோகம், சுகாதார வசதிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பேணல், தடையற்ற மின்சார விநியோகம் மற்றும் அவசர கால சேவைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், கல்முனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி (MOH), பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்முனை மாநகர சபை அதிகாரிகள், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கமு/அல்-பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர், இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
விழா நிகழ்வுகளை எவ்வித இடையூறுகளுமின்றி அமைதியான முறையிலும் பக்திபூர்வமாகவும் நடத்துவதற்குச் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும் பாதுகாப்புத் தரப்பினரும் தொடர்ச்சியான ஒருங்கிணைப்புடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Radio