SuperTopAds

கல்முனை பிரதான வீதியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் புதிய காரியாலயம் திறப்பு

ஆசிரியர் - Editor III
கல்முனை பிரதான வீதியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் புதிய காரியாலயம் திறப்பு

கல்முனை பிரதான வீதியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் புதிய காரியாலயம் திறப்பு 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளையின் புதிய காரியாலய திறப்பு விழா, கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பாக்கியதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலின் முதலாவது மேல் மாடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளைத் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம். முர்ஷித் (முப்தி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் எம். அர்கம் நூராமித் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தைத் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது வருகை தந்த பிரதம அதிதியான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் எம். அர்கம் நூராமித் அவர்களுக்கு, கல்முனை கிளை சார்பாகத் தலைவர் மற்றும் உறுப்பினர்களினால் சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 இக் காரியாலய திறப்பு விழாவில் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளையானது கல்முனைப் பிரதேசத்தில் கடந்த 03 வருடங்களுக்கும் மேலாகப் வேறொரு கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையிலேயே, தற்போது பாக்கியதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலின் மேல் மாடிக்குத் தன் சேவையை விரிவாக்கம் செய்து புதிய அலுவலகத்தில் இன்று முதல் செயற்படத் தொடங்கியுள்ளது.

கல்முனைப் பிரதேசத்தில் சமூக அமைதி, வழிகாட்டல் மற்றும் பல்வேறு சமூக நலன்சார் வேலைத்திட்டங்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்முனை கிளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio