மேற்கு ஆசிய பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டிற்கும் அமெரிக்காவால் பாதுகாப்பை வழங்க முடியாது - ஈரான்!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிற்கும் அமெரிக்காவால் பாதுகாப்பை வழங்க முடியாது என்றும், பாதுகாப்பு வழங்கும் வாஷிங்டனின் பலவீனம் இப்போது வெளிப்பட்டுவிட்டது என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சன் ரெசாயி குற்றம் சாட்டியுள்ளார்.
பிராந்திய பாதுகாப்பை வெளிநாட்டு தலையீடின்றி உள்ளூர் நாடுகளே தீர்மானிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.




