SuperTopAds

ஊடகச் சுதந்திரத்திற்குப் கடுமையான பாதிப்பு - செக் குடியரசில் வீதிகளில் திரண்ட மக்கள்!

ஆசிரியர் - Editor IV
ஊடகச் சுதந்திரத்திற்குப் கடுமையான பாதிப்பு - செக் குடியரசில் வீதிகளில் திரண்ட மக்கள்!

செக் குடியரசில், அரசு ஊடகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் முறையை மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆரம்ப கட்ட ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, பிராகு நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஊடகச் சீர்திருத்தமானது ஊடகச் சுதந்திரத்திற்குப் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், அதிகாலை வேளையில் நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி அரசாங்கம் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை செக் தொலைக்காட்சி மற்றும் வானொலி பொதுமக்களிடம் வசூலித்து வந்த உரிமக் கட்டண முறையை (license fee system) இரத்து செய்யக்கூடிய இந்த சட்ட மூலம் அவசரமாக நிறைவேற்றப்பட்டதை எதிர்க்கட்சியினரும் ஊடக அமைப்புகளும் கடுமையாக எதிர்த்துள்ளன.

அரசு ஊடகங்களுக்கு பாதீட்டு திட்டத்திலிருந்து பணம் ஒதுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள், ஒளிபரப்பு நிறுவனங்களை அரசியல் அழுத்தங்களுக்கு ஆளாகக்கூடியதாக மாற்றுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Radio