பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானங்கள் விபத்து - நான்கு உயிரிழப்பு பலி!

பிலிப்பைன்ஸ் விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு SF-260 ரக பயிற்சி விமானங்கள் வழக்கமான ரோந்து மற்றும் பயிற்சிக்காக வானில் பறந்தபோது இந்த விபத்து நேரிட்டது.
பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்களும் வானிலேயே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விமானப்படை தளத்திற்குள்ளேயே விழுந்து நொறுங்கின.
இந்த விபத்தில் விமானங்களை இயக்கிய 4 விமானிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமானப் படை தரப்பில் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிலிப்பைன்ஸ் விமானப் படையில் உள்ள அனைத்து SF-260 ரக விமானங்களின் இயக்கமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




