பூஷெர் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வரும் ரஷ்ய நிபுணர்கள் ஈரானை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை!

ஈரானின் பூஷெர் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வரும் ரஷ்ய நிபுணர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் ஈரானை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்ய தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன் அணுமின் நிலையத்தின் அனைத்துப் பணிகளும் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெஹ்ரானில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.




