SuperTopAds

கடும் வெப்ப அலை - ஐரோப்பிய நாடுகளில் 50,391 பேர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor IV
கடும் வெப்ப அலை - ஐரோப்பிய நாடுகளில் 50,391 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக, நகர்ப்பகுதிகளில் மட்டும் 50,391 பேர் உயிரிழந்துள்ளதாக புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு அதிகபட்ச கோடைக்கால உயிரிழப்பாகப் பதிவான 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் (29,480 இறப்புகள்), தற்போது பதிவாகியுள்ள இறப்பு எண்ணிக்கை 71% அதிகம் ஆகும்.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் தீவிர காலநிலை மாற்றமே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இம்பீரியல் மருத்துவ கல்லூரி லண்டன் (Imperial College London) மற்றும் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளி (LSHTM) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

Radio