சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு!

அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் மீண்டும் விரைவில் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 117.37 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விலையாகும்.
அதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 103 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.
இது கடந்த ஐந்து வாரங்களில் பதிவான அதிகபட்ச விலையாகும்.




