SuperTopAds

இஸ்ரேலின் ஏவுகணைப் பாதுகாப்பு - மூன்று ஆண்டுகளில் 11 பில்லியன் டொலர் செலவளித்த அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேலின் ஏவுகணைப் பாதுகாப்பு - மூன்று ஆண்டுகளில் 11 பில்லியன் டொலர் செலவளித்த அமெரிக்கா!


இஸ்ரேலின் ஏவுகணைப் பாதுகாப்புக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா 11 பில்லியன் டொலர் வரிப்பணத்தைச் செலவிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்கா–இஸ்ரேல் உறவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கருத்துத் தெரிவித்த அராக்சி, இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா பயன்படுத்திய ஏவுகணை இடைமறிப்பு ஆயுதங்களின் எண்ணிக்கை, இஸ்ரேல் தானாகப் பயன்படுத்திய எண்ணிக்கையைவிட அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய உறவைப் பரஸ்பரம் பயனளிக்கும் கூட்டாண்மை என்று கூற முடியாது எனத் தெரிவித்த அவர், “இது சமநிலையான உறவு அல்ல; ஒட்டுண்ணித்தனமான உறவு” என்று விமர்சித்துள்ளார்.

Radio