SuperTopAds

அதிக தேநீர் அருந்துவது தொற்றா நோய்களை தடுக்க உதவும் - ஆய்வில் தகவல்!

ஆசிரியர் - Editor IV
அதிக தேநீர் அருந்துவது தொற்றா நோய்களை தடுக்க உதவும் - ஆய்வில் தகவல்!

தொடர்ந்து தேநீர் அருந்துவது பக்கவாதம், இதய நோய் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும் எனப் புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

சுமார் 5 இலட்சம் சீனர்களை சராசரியாக 9 ஆண்டுகள் கண்காணித்து.

மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் தேநீர் அருந்துபவர்களுக்கு இரத்த நாள நோய்கள் ஏற்படும் ஒட்டுமொத்த அபாயம் 11.2 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படும் அபாயம் 36.6 சதவீதமும், மூளையின் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களின் அபாயம் 19.1 சதவீதமும் குறைவாகக் காணப்பட்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மிதமான செறிவுடன், அதிக வெப்பமில்லாமல் தேநீர் அருந்துவது சிறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கறுப்புத் தேநீரில் இந்தத் தொடர்பு வலுவாகக் காணப்பட்டதுடன், பச்சைத் தேநீரும் நன்மையுடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தேநீர் அருந்துவது மட்டுமே இதய நோய்களைத் தடுக்காது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையுடன் இணைந்தே இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆய்வு அவதானிப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதால், தேநீர் அருந்துவதற்கும் நோய்களின் அபாயம் குறைவதற்கும் இடையிலான தொடர்பை மட்டுமே இது காட்டுகிறது நேரடியான காரணத்தை உறுதிப்படுத்தவில்லை

Radio