SuperTopAds

தாய்வானை தாக்கிய சம்பி சூராவளி - பலர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor IV
தாய்வானை தாக்கிய சம்பி சூராவளி - பலர் உயிரிழப்பு!

சம்பி சூறாவளி காரணமாக தாய்வானில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 171 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி (23) பிற்பகல் 3 மணிவரையான நிலவரப்படி இந்தப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

முன்னதாக, சூறாவளி காரணமாக 94 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உந்துருளிகளில் இருந்து தவறி விழுந்தமை உள்ளிட்ட போக்குவரத்து விபத்துகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தவறி விழுந்ததாலும், சரிந்து விழுந்த அல்லது சாய்ந்த விளம்பரப் பலகைகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவற்றில் மோதியதாலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள் எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஐவர் வியட்நாமியர்கள், இருவர் இந்தோனேசியர்கள் மற்றும் இருவர் மலேசியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்து முற்றாகத் தடை - கிரீஸ் நாடாளுமன்றம்  முன்னெடுப்பு!

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை கிரீஸ் நாடாளுமன்றம் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான விசேட சட்டமூலம் அண்மையில் அந்தநாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாடு சிறுவர்களின் மனநலம், உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Radio