கடல்சார் விதிகளை மீறிய கப்பல்களின் போக்குவரத்தை முழுமையாக நிறுத்திய ஈரான்!

ஹோர்முஸ் ஜலசந்தி கடல்சார் விதிகளை மீறிய கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (21)மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும், நேற்றிரவு மற்றொரு விதிமீறிய கப்பல் அழிக்கப்பட்டதையும் தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவின் வான்வழி தலையீடுகளுக்கு ஈரான் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.




