சாலியவெவ பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி கொடூர விபத்து: இருவர் உயிரிழப்பு

சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சொகுசுப் பயணிகள் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் – திருகோணமலை வீதியில், மஹஹேன்யாய சந்திக்கு அருகில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த சொகுசுப் பஸ் அதே திசையில் முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தை தொடர்ந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பாலமொன்றில் மோதி, பின்னர் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி, பஸ்ஸின் சாரதி, நடத்துநர் மற்றும் பஸ்ஸில் பயணித்த 14 பயணிகள் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




