SuperTopAds

ஈரான் தொடர்பில் விரைவில் முக்கிய தீர்மானம் – டிரம்ப்!

ஆசிரியர் - Editor IV
ஈரான் தொடர்பில் விரைவில் முக்கிய தீர்மானம் – டிரம்ப்!

ஈரானுடனான மோதலில் அமெரிக்கா இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரானுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விரைவில் ஏதாவது ஒரு முடிவு ஏற்படும். அது தேர்தலுக்குப் பிறகு நிகழலாம் எனப் பலரும் கருதுகின்றனர்.

என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்,” என அவர் கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Radio